உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தையல் கலைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை ;அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் 1,500 ரூபாயாக வழங்க கோரி கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்காண்டுகளை கடந்த நிலையில் அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாவட்ட தையல் சங்க பொதுசெயலாளர் வேலுசாமி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை