உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுங்க! எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் புகார்

பண மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுங்க! எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் புகார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மானியத்துடன் கடன் உதவி பெற்று தருவதாக ஏமாற்றிய பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சப்-கலெக்டர் ராமகிருஷ்ண சாமியிடம், பொள்ளாச்சி எம்.எல்.ஏ. தலைமையில் சப் - கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: வடக்கிபாளையம், ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த, இரண்டு பெண்கள், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் மானியத்துடன் தொழில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். இதற்காக முன்பணம் பெற்றனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை கடன் வரவில்லை. பலமுறை தொடர்பு கொண்டாலும் மொபைல்போனை எடுப்பதில்லை. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்யணும்! பொள்ளாச்சி பா.ஜ. கிழக்கு ஒனறிய தலைவர் கவுதம் லிங்கராஜ் கொடுத்த மனுவில், 'மரம்புடுங்கிக்கவுண்டனுார் கிராமத்தில் தனியார் மொபைல்டவர் அமைக்கப்பட்டுள்ளது. டவரில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காரணமாக மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அரசு விதிமுறைகளின் படி, கதிர்வீச்சு வரம்புக்குள் இல்லை என மக்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தேவை பெரியபோதுவை சேர்ந்த சூர்யா மற்றும் உறவினர்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுத்தனர். மனுவில், 'எனது அண்ணன் சதீஸ்குமார், வேலை பார்த்து வந்தவரிடம் முன்பணமாக, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தார். அந்த பணத்தை இரண்டு நாளில் திருப்பி கொடுப்பதாக தெரிவித்து இருந்தார். வளந்தாயமரம் பஸ் ஸ் டாப் அருகே, அண்ணனுக்கு பணம் கொடுத்தவர்கள், என்னிடம் பணம் கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். மேலும், எனது அக்காவின் மாமனாரையும் தாக்கினர். இது குறித்து விசாரணை செய்து, குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை