உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூரில் தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் பங்கேற்று, வரும் ஜூலை மாதம் சேலத்தில் நடைபெறும் உழவர் தின பேரணி மற்றும் மாநாட்டின் ஆயத்த ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். கோவை மாவட்ட தலைவர் தண்டபாணி, 2025ம் ஆண்டின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாதன், கடந்த ஆண்டின் கோவை மாவட்ட செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில், மறைந்த மூத்த விவசாயி ஆசிரியர் ராமசாமிக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மாநாட்டில், கோவை மாவட்டத்தில் இருந்து, 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வது எனவும், மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும், அதிக அளவில் உறுப்பினர்களை கலந்து கொள்ள செய்வது எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கோவை மாவட்ட தலைவர் மற்றும் பொருளாளராக தண்டபாணி, மாவட்ட பொது செயலாளர் மற்றும் நீலகிரி அமைப்பாளராக ரங்கநாதன் உள்ளிட்ட, 37 பேர் கொண்ட கோவை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ