உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக அரசின் மாத்திரைகள் வாய்க்கால் ஓரத்தில் குவியல்

தமிழக அரசின் மாத்திரைகள் வாய்க்கால் ஓரத்தில் குவியல்

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் -- மாதம்பட்டி ரோட்டில் உள்ள வாய்க்கால் ஓரத்தில், தமிழக அரசால், இருதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளன.தமிழக அரசு சார்பில், அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில், நோயாளிகளுக்கு, இலவச மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் -- மாதம்பட்டி ரோட்டில் உள்ள வாய்க்கால் ஓரத்தில், தமிழக அரசால், நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மாத்திரைகள், குவியலாய் கொட்டப்பட்டுள்ளது. இங்கு, க்ளோபிடோக்ரல் ஐ.பி., 75 மி.கி., கிளிமிபிரைட் ஐ.பி., 1 மி.கி., ஆஸ்பிரின் கேஸ்ட்ரோ ரெசிஸ்டண்ட் ஐ.பி., 150 மி.கி., ஆகிய மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளன.தலா ஒரு பெட்டியில், 100 மாத்திரைகள் உள்ளன. இதுபோல, சுமார், 200 பெட்டிகள் கொண்ட மாத்திரை வீணாகியுள்ளது. இந்த மாத்திரைகள், இருதய நோய் உள்ள நோயாளிகள் பயன்படுத்தும் உயிர்காக்கும் மாத்திரைகளாகும். உயிரை காக்க பயன்படும் மாத்திரைகள், குவியலாக, வாய்க்கால் ஓரத்தில் கொட்டிக்கிடக்கிறது. இந்த அனைத்து மாத்திரைகளுக்கும், 2025ம் ஆண்டு, பிப்ரவரி வரை, காலாவதி தேதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி