உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக பெண்கள் கபடி அணி; வெண்கல பதக்கம் வென்றது

தமிழக பெண்கள் கபடி அணி; வெண்கல பதக்கம் வென்றது

சூலுார்; தேசிய அளவிலான கபடி போட்டியில், தமிழக பெண்கள் அணி, வெண்கல பதக்கம் வென்றது.உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில், கோவை அக் ஷயா கலைக்கல்லுாரி மாணவி ஹனிஷ்கா, தமிழக அணியில் பங்கேற்று விளையாடினார்.இப்போட்டியில், தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது. வெற்றியை ஈட்டிய தமிழக அணி மற்றும் மாணவி ஹனிஷ்காவுக்கு கல்லுாரி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ