மேலும் செய்திகள்
மைசூரு தமிழ் சங்க முப்பெரும் விழா கோலாகலம்
07-Jul-2025
கோவில்பாளையம்; கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில், கவையன் புத்தூர் தமிழ்ச் சங்க விழா நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார். கல்லூரி தமிழ்த் துறை தலைவர் நஞ்சையன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ் உலக மொழிகளில் எல்லாம் மூத்த மொழி. ஆய்வாளர்களின் கருத்துப்படி, தொன்மையான இலக்கண, இலக்கியங்கள் ஒருங்கே உள்ளது தமிழில் தான், என்றார். ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் சரவணகுமார், சென்னை, கல்வெட்டு அமைப்பின் தலைவர் ரவிக்குமார், உள்ளிட்ட பலர் பேசினார்கள்.வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. சாதித்த பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பேச்சாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
07-Jul-2025