உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்திஜெயந்தியன்று மது விற்ற டாஸ்மாக் பாருக்கு சீல்

காந்திஜெயந்தியன்று மது விற்ற டாஸ்மாக் பாருக்கு சீல்

தொண்டாமுத்துார்: தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியையொட்டி, 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பேரூர் - வேடபட்டி ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' பார் மற்றும் பல்வேறு இடங்களில், தடையை மீறி சட்ட விரோத மதுவிற்பனை படுஜோராக நடந்தது. இதுகுறித்த செய்திகள் பரவிய பின், தொண்டாமுத்துார் மற்றும் பேரூர் போலீசார், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நாதன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 48 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்துார் மற்றும் பேரூர் போலீசார், சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்ட 'டாஸ்மாக்' பார் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, வழக்குப்பதிவு செய்தனர். சட்ட விரோதமாக மது விற்ற குற்றத்துக்காக பாருக்கு, 'டாஸ்மாக்' மேலாளர்கள், 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை