உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றும், நாளையும் வரி வசூல் முகாம்

இன்றும், நாளையும் வரி வசூல் முகாம்

கோவை; கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக இன்றும் (பிப்., 1), நாளையும் (பிப்., 2) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது; காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும்.கிழக்கு மண்டலத்தில், 23வது வார்டு பூங்கா நகர் விநாயகர் கோவில், 56வது வார்டு ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம், மேற்கு மண்டலத்தில், 39வது வார்டு அனன்யா நானா நானி அபார்ட்மென்ட், 40வது வார்டு வீரகேரளம் பொங்காளியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இன்று ஒரு நாள் மட்டும் முகாம் நடைபெறும்.வீரகேரளம் லிங்கனுார் ரோடு விநாயகர் கோவில் ஹவுசிங் யூனிட், 33வது வார்டு புளியமரம் சக்தி நகர் அங்கன்வாடி மையத்தில் நாளை (பிப்., 2) மட்டும் முகாம் நடைபெறும்.வடக்கு மண்டலத்தில், 15வது வார்டு கே.என்.ஜி.புதுார் அனன்யா நானா நானி அபார்ட்மென்ட், 19வது வார்டு மணியகாரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டு காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலத்தில் 89வது வார்டு சுண்டக்காமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 90வது வார்டு கோவைப்புதுார் டபிள்யு பிளாக், 94வது வார்டு மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில், சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது.இத்தகவலை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி