உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில், குடிநீர் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்டவைகளை ஆண்டு தோறும் ஊராட்சி அலுவலகத்தில் வசூல் செய்யப்படுகிறது.தற்போது வரை, 2024 --- 25ம் ஆண்டிற்கான, வீட்டு வரி, 86 சதவீதம் மற்றும் குடிநீர் கட்டணம் 70 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.வரி செலுத்தாத மக்கள், அந்தந்த பகுதியிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும், என, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி