உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடைக்காலத்தடை நீக்கத்துக்கு வரிப்பயிற்சியாளர்கள் வரவேற்பு

இடைக்காலத்தடை நீக்கத்துக்கு வரிப்பயிற்சியாளர்கள் வரவேற்பு

கோவை: இந்திய பட்டய வரிப்பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் மீது, தொடுக்கப்பட்ட அனைத்து தடைகளையும், கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியதை, அனைத்து வரிப்பயிற்சியாளர்களுக்கும் தெரிவிக்கும் விதமாக, கோவை குஜராத் சமாஜத்தில், சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில், இந்திய பட்டய வரிப்பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் பார்த்தசாரதி பேசுகையில், ''உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மிகவும் முக்கியமானது. பொதுமக்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காகவே, இந்த வழக்கை தீவிரமாக நடத்தினோம். பிற நாடுகளுக்கு செல்லும் நம் பட்டய வரிப்பயிற்சியாளர்களின் மதிப்பை, காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.கூட்டத்தில், நிறுவனத்தின் கோவை கிளைத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் நல்லபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ