மேலும் செய்திகள்
வீடு, அங்கன்வாடி மையத்தை சேதப்படுத்திய யானைகள்
11-Oct-2026
வால்பாறை: வால்பாறை அருகே, பாம்பு கடித்து டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். வால்பாறை அடுத்துள்ள, கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட்டை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் சதீஷ், 40. இதய நோயாளியான இவர், அங்குள்ள டீ கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இன்று (நவ.,10) காலை பணிக்கு சென்ற அவரை, சிலிண்டருக்கு அடியில் இருந்த விஷபாம்பு கடித்தது. ஆபத்தான நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கேரள மாநிலம் மளுக்கப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Oct-2026