அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவதாக ஆசிரியர்கள் கவலை
கோவை, ; பிளஸ் 1 மாணவர் சேர்க்கை, அனைத்து பள்ளிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைத் தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.கோவையில் செயல்படும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு வருபவர்கள், உயிரியல், பியூர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளைத் தவிர்க்கின்றனர். தனியார் பள்ளிகளிலும் இதே நிலைதான் என்று கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ug3fzu5e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'இன்று மாணவர்கள் கஷ்டப்பட விரும்பவில்லையோ என தோன்றுகிறது. 460க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களும், அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுக்க மறுக்கின்றனர்.இந்தப் பிரிவுகளை எடுத்து படித்தால், ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன என்று விளக்கினாலும், ஏற்க தயாராக இல்லை. 50 மாணவர்களில் சுமார் 10 பேர் மட்டுமே அறிவியல் பாடங்களைத் தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்' என்றார்.இன்னொரு ஆசிரியர் கூறுகையில், 'அறிவியல் பிரிவு பிளஸ் 2வில் மதிப்பெண் எடுப்பது கடினம் என்ற தவறான எண்ணம், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உள்ளது.கணிதத்தில் 94 மதிப்பெண் பெற்றிருந்தாலும், கணிதத்தை முதன்மைப் பாடமாக தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டுகின்றனர். காரணம், பாடத்திட்டம் கடினம். எனவே, இந்த பாடங்களை எளிமைப்படுத்த வேண்டும்' என்றார்.
ஆராய்ச்சியாளர்கள் குறையும் அபாயம்
5 ஆண்டுகளுக்கு முன், 10ம் வகுப்பில் அறிவியல், கணிதம் பாடத் திட்டங்களில், தேர்வு முறை சிறப்பாக இருந்தாக கூறும் கல்வியாளர்கள், இதே நிலை தொடர்ந்தால், அறிவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை குறைவதோடு, உயர் கல்வியிலும் அறிவியல் துறையைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். இதன் விளைவாக, தமிழ்நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குறையும் அபாயம் உள்ளதாக, கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.