மேலும் செய்திகள்
மாநகராட்சி ஆசிரியருக்கு கவுன்சிலிங் எப்போது
23-Jul-2025
கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், வாயில் முழக்க போராட்டம் நடந்தது. கோவை அரசு கலைக்கல்லுாரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முறையற்ற முறையில் நியமனம் செய்த மாற்று பணி ஆசிரியர்கள் ஆணையை ரத்து செய்ய வேண்டும், அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 100 முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், யு.ஜி.சி., வழிகாட்டுதலின் படி கல்லுாரி ஆசிரியர்களில் ஓய்வு பெறும் வயதினை, 65 ஆக உயர்த்த வேண்டும், இடமாறுதல் பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மண்டல செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கிளை துணை தலைவர் ராஜேஷ், செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
23-Jul-2025