உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இடமாற்ற கலந்தாய்வு எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

 இடமாற்ற கலந்தாய்வு எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

கோவை, டிச. 27- மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு, நடப்பு கல்வி ஆண்டிலாவது நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 148 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாநகராட்சி பள்ளிகளுக்குள் இடமாற்றம் பெறுவதற்கான மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,“இந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, கடந்த ஜூலை மாதம் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. மேலும், அலகு விட்டு அலகு மாறுதலுக்காக தடையின்மைச் சான்று பெற விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கும் இதுவரை அந்த ''சான்றுகள் வழங்கப்படவில்லை,” என்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,“எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும் சூழலும் உள்ளது. மேலும், பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி