உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜயை சந்தித்ததால் ஆசிரியர் சங்கம் உடைப்பு: அமைச்சருக்கு எதிராக நிர்வாகி கொந்தளிப்பு

விஜயை சந்தித்ததால் ஆசிரியர் சங்கம் உடைப்பு: அமைச்சருக்கு எதிராக நிர்வாகி கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''எங்கள் கோரிக்கைக்கு ஆதரவு தரக்கோரி த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் மகேஷ்,'' என குற்றம்சாட்டினார் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனர் மாயவன். அவர் நம்முடைய நாளிதழுக்கு அளித்த பேட்டி: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5fkevuub&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தது ஏழு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால், நிதி நிலையைக் காரணம் காட்டி, அரசு தரப்பில் எதையும் செய்து கொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எதுவும் நடக்கவில்லை. எங்கள் கோரிக்கை மற்றும் போராட்டங்களுக்கு வலுசேர்ப்பதற்காக, ஆளுங்கட்சிக்கு எதிர் நிலையில் இருந்து செயல்படும் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயை சந்திக்க முடிவெடுத்து, கடந்த 13ல் சந்தித்தோம். எங்கள் பிரச்னைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டவர், நாங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இது ஆளுங்கட்சி தரப்புக்கும் கல்வி அமைச்சர் மகேஷுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியர்களின் மொத்த ஆதரவையும் தி.மு.க., இழந்து விட்டதாக, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், எங்கள் சங்கத்தை பிளக்கும் பணியில் இறங்கி விட்டனர். ஏற்கனவே சங்க விதிகளை மீறி செயல்பட்ட, சங்க நிர்வாகிகள் சிலர், 'சங்கத்தில் இருப்போர், ஒருதலைப்பட்சமாக நடிகர் விஜயை சந்தித்துள்ளனர். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. 'கோரிக்கைகளை அரசுதான் நிறைவேற்ற வேண்டும். அதற்காக, அரசைத்தான் முறையாக அணுக வேண்டுமே தவிர, இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. 'அரசியல் செய்வது போல, சங்க நிர்வாகிகள் சிலர், நடிகர் விஜயை சந்தித்தது எங்களுக்கு பிடிக்கவில்லை; அதனால், சங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்' எனக்கூறி, சங்கத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். பின், அவர்கள் அமைச்சர் மகேஷை சந்தித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிர்வாகிகள், புதிதாக ஒரு சங்கத்தை துவக்கி உள்ளனர். கல்வி அமைச்சர் மகேஷ், தன்னுடைய துறையை மேம்படுத்தும் வேலையை விட்டுவிட்டு, சங்கங்களை பிளவுபடுத்தும் வேலையை தான் அதிகம் செய்கிறார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் வரை ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Pascal
ஜூன் 19, 2025 22:48

இவர் பெரிய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தில் இருந்து வந்தவர். அரசியலில் ஒரு வார்டு மெம்பராக கூட யாரும் ஆகல. இவரை போய் சந்திச்சது கண்டிப்பாக ஒரு கழிசடையாகத்தான் இருக்கும்


Sivaprakasam Chinnayan
ஜூன் 19, 2025 17:07

எவ்வளவு தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் உள்ளது?


Kulandai kannan
ஜூன் 19, 2025 11:04

ஓய்வூதியம் என்று வருவதை நினைத்து, திருப்தி படுங்கள் ஆசிரியர்களே. கல்வித் துறை முழுக்க முழுக்க செலவினங்களை மட்டுமே உடையது.


Kulandai kannan
ஜூன் 19, 2025 11:01

இப்படித்தான் வணிகர் சங்கத்தை உடைத்து, அல்லக்கை விக்கிரமராஜாவின் சங்கத்தை உருவாக்கினார் கரூணா.


angbu ganesh
ஜூன் 19, 2025 09:10

மண் குதிரை விஜய் இவனை நம்பி ஆனா பொம்மையை கூட நம்ப கூடாது


நிவேதா
ஜூன் 19, 2025 08:21

அட மாயவா. சங்க செயல்குழு, பொதுக்குழு முடிவுப்படி அரசை எதிர்த்து போராடுறது சரி. ஒரு அரசியல்கட்சி தலைவரை போய் சந்தித்து ஆதரவு கேட்க குழுவின் அனுமதி தேவையில்லையா? நீங்கள் உண்மையிலேயே ஆசிரியர் சங்கத்துக்கு போராடுபவராக இருந்தால், எல்லா எதிர்கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கணும். நீங்கள் அதை செய்யவில்லையே. இதை மாயவன் தன்னை அணில் குஞ்சாக காட்டிய தருணம் என்றே பார்க்க தோன்றுகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 07:55

இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு, அரசு, ஆசிரியர் சங்கம் அனைத்தும் பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்கள். திமுக வின் ஒரே எதிரியாக தவெக வைக் காட்ட அனைத்து தரப்புமே முயற்சிக்கிறார்கள். தவெக என்பது திமுகவால் தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்ட கட்சி. காரணம், திமுகவின் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க .....


நிவேதா
ஜூன் 19, 2025 08:39

உண்மை. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக பாஜக கூட்டணியின் பக்கம் திருப்பக்கூடாதென இந்த வேலையை செய்கிறார்கள்


Mani . V
ஜூன் 19, 2025 04:45

உடைப்பு, குடியை கெடுத்தல் இதெல்லாம் நாங்கள் இன்று நேற்றா செய்கிறோம்? ஊழலின் ஊற்றுக்கண் எங்கள் தலைவர் கற்றுக் கொடுத்த தந்திரங்களில் இதுவும் ஒன்று.


Kasimani Baskaran
ஜூன் 19, 2025 03:52

பல வழிகளில் தீம்காவுக்கு உறுதிமொழியை அடிப்படையாக வைத்து இலவசமாக வரும் வாக்குகள் இனி பிரித்து மேயப்படும் போல தெரிகிறது.


Manaimaran
ஜூன் 19, 2025 03:50

இவனுகளுக்கு சம்பளத்த பாதியாகுறைக்கனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை