மேலும் செய்திகள்
மாநில கூடைப்பந்து; திறமை காட்டியது கோவை அணி
08-Oct-2025
கோவை: ஏஞ்சல் ஏலினா நினைவு கூடைப்பந்து போட்டி கோவையில் நேற்று நடந்தது. மாணவர்கள் 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளியின் 'ஏ' அணியும், பாரதி பள்ளி அணியும் மோதியதில், ராஜலட்சுமி அணி வென்றது. பீப்பள் 'ஏ' அணியும், சுகுணா இன்டர்நேஷ்னல் பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், பீப்பள் 'ஏ' அணியும், ராஜலட்சுமி 'சி' மற்றும் லிசிக்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், லிசிக்ஸ் அணி வெற்றி பெற்றது. எஸ்.வி.ஜி.வி., 'ஏ' மற்றும் ராக்ஸ் பள்ளிக்கூடம் அணிகள் மோதிய ஆட்டத்தில், எஸ்.வி.ஜி.வி., அணியும், சுகுணா பிப் பள்ளி மற்றும் யங் பிளட் அணிகள் மோதிய ஆட்டத்தில், யங் பிளட் அணியும் வென்றன. 11 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், அல்வேர்னியா பள்ளி மற்றும் எஸ்.வி.ஜி.வி., 'பி' அணிகள் மோதிய ஆட்டத்தில், அல்வேர்னியா அணியும், எஸ்.வி.ஜி.வி., 'ஏ' மற்றும் சி.சி.எம்.ஏ., அணிகள் மோதிய ஆட்டத்தில், சி.சி.எம்.ஏ., அணியும் வெற்றிபெற்றன.
08-Oct-2025