உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில்நுட்ப பயிற்சி மையம்; ஜே.சி.டி. கல்லுாரியில் துவக்கம்

தொழில்நுட்ப பயிற்சி மையம்; ஜே.சி.டி. கல்லுாரியில் துவக்கம்

கோவை; ஜே.சி.டி. இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரியில், மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது. ரெடிங்டன் அறக்கட்டளையின் வெங்கடேஷ் பேசுகையில், ''மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை உலகளவில் உயர்த்தும் பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார். சிஸ்கோ மூத்த இயக்குனர் கிளாரன்ஸ் பார்போசா இணையவழியில் பங்கேற்று, மாணவர்களை பாராட்டினார். ஜே.சி.டி. அகாடமி அசோசியேட் துணை தலைவர் சுரேஷ்பாபு, சிஸ்கோ சிஎஸ்ஆர் லீட் அனுராக் ஸ்ரீவஸ்தவா, இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர்; மாணவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். கல்லுாரி முதல்வர் மனோகரன், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை தலைவர் கார்த்திகுமார், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி