உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

அங்கக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பொள்ளாச்சி அங்கக பயிர் செய்வோர் சங்கம் செயல்படுகிறது.இதில், 32 விவசாயிகள் குழுக்களாக இணைந்து அங்கக விவசாயம் செய்கின்றனர். இவர்களுக்கு மீனாட்சிபுரம் ராமர் இயற்கை விவசாய பண்ணையில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.அங்கக சான்று அலுவலர் மகேஷ்வரன், அங்கக சான்று பெறும் நடைமுறைகள் குறித்து விளக்கினார். வடக்கு தோடக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.ராமர் பண்ணை தாளாளர், பண்ணையில் செயல்படுத்தும் அனைத்து இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். பயிற்சியில், பொள்ளாச்சி அங்கக பயிர் செய்வோர் சங்க உறுப்பினர்கள், தோட்டக்கலை அலுவலர் சிந்துஜா, உதவி தோட்டக்கலை அலுவலர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ