உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்

மேட்டுப்பாளையம்; கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், சிறுமுகை ஒன்றிய செயற்குழு கூட்டம், ஓதிமலை அடிவாரம் பகுதியில் நேற்று நடந்தது.இக்கூட்டத்திற்கு சிவநேச அடிகளார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.ஹிந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன் பேசுகையில், ''மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க முழு முயற்சியை நாம் எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். தனியார் கோவில்களில் உண்டியல் வைக்க வேண்டாம். ஹிந்து அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் பொருட்களை, தனியார் கோவில் பூசாரிகள் வாங்க வேண்டாம். கிராமங்கள் தோறும் ஹிந்து முன்னணி கிளைகளை அமைக்க வேண்டும்,'' என்றார்.இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் சிவக்குமார், செயலாளர் புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை