உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெக்ஸ்டைல் வாக்கத்தான்

டெக்ஸ்டைல் வாக்கத்தான்

கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக டெக்ஸ்டைல் வாக்கத்தான் நிகழ்ச்சி நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது.மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரி சார்பில் 'டெக்ஸ்டைல் வாக்கத்தான்' ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரி மாணவ - மாணவியர் பொது மக்கள் என நுாற்றுக்கணக்கானோர் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி பேரணியாக சென்றனர்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து வானதி சீனிவாசன் பேசுகையில், ''டெக்ஸ்டைல் இல்லாமல் கோவை விழா நடைபெறாது. ஆண்கள் வானவில்லின் ஏழு நிறங்களை தான் பார்ப்பார்கள் ஆனால் பெண்கள் அந்த ஏழு நிறங்களில் ஏழு லட்சம் வண்ணங்களை கண்டறிந்து வெளிப்படுத்தக் கூடியவர்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ