உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி மையத்தில் நன்றி நவிலல் விழா

கல்வி மையத்தில் நன்றி நவிலல் விழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தில் நன்றி நவிலல் விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்ததின் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, நன்றி நவிலல் விழாவாக வாசிப்பு மையத்தில் கொண்டாடப்பட்டது. அமைப்பாளர் ஹரிப்பிரியா வரவேற்றார்.அமைப்பின் நிறுவனர் அம்சபிரியா தலைமை வகித்து பேசுகையில், 'விழாவின் நோக்கம், நன்றி நவிலல் விழாவாக கொண்டாடுப்படுவதின் நோக்கத்தையும், கல்விக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்,' என விளக்கினார்.தமிழாசிரியர் செந்திரு, மாணவர்களுக்கு கதை சொல்லியாக மாறி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் உத்தி முறையை கதை வடிவில் வழங்கினார்.மாணவர்கள் வாசித்த நுால்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதன்பின் மாணவர்களின் கவியரங்கம் நடந்தது. சமூக ஆர்வலர்கள் சிவக்குமார், அப்துல் ஹமீர் ஆகியோர் பேசினர்.அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, எதிர்கால செயல்பாடுகளாக மேடை பேச்சு பயிற்சி, படைப்பாற்றல் பயிற்சி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. கவிஞர் காளிமுத்து நன்றி கூறினார். நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி