உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 7 மீட்டர் குளக்கரை சாலை 11 மீட்டராகிறது வாகன போக்குவரத்து எளிதாகும்

7 மீட்டர் குளக்கரை சாலை 11 மீட்டராகிறது வாகன போக்குவரத்து எளிதாகும்

அன்னுார்; அன்னுார் குளக்கரை சாலையின் அகலம் ஏழு மீட்டரில் இருந்து, 11 மீட்டராக விரிவுபடுத்தப்படுகிறது. அன்னுாரில் மேட்டுப்பாளையம் சாலையில், 119 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. குளத்தின் கரையில் மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து, ஓதிமலை சாலை வரை, ஏழு மீட்டர் அகலத்திற்கு கடந்த ஆண்டு சாலை அமைக்கப்பட்டது.இதில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அன்னுார் பேரூராட்சி சார்பில், குளக்கரை சாலையை அகலப்படுத்தவும், குளத்தில் மண் எடுத்து குளக்கரையை பலப்படுத்தவும் அனுமதி கோரி கடிதம் தரப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் அனுமதி அளித்தன. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக குளக்கரையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இப்பணியை பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து 310 மீட்டர் தொலைவுக்கு தற்போதுள்ள ஏழு மீட்டர் அகலம் 11 மீட்டர் அகலமாக மாறுகிறது. இதற்காக 200க்கும் மேற்பட்ட லோடு மண் கொட்டப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 'இன்னும் இரண்டு நாட்களில் பணி முழுமையாக முடிவடைந்து விடும். இதையடுத்து ஒரே சமயத்தில் இரண்டு கனரக வாகனங்கள் இதில் எளிதாக சென்று வர முடியும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை