ஆஸ்திக சமாஜத்தின் நாம சங்கீர்த்தன வைபவம்
கோவை; ஆஸ்திக சமாஜம் சார்பில், 26வது ஆண்டு நாமசங்கீர்த்தன வைபவம், தடாகம் ரோடு, இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வி.ஆர்.ஜி., மஹாலில் நடக்கிறது. வரும் ஜூலை 31ம் தேதி விழா துவங்குகிறது.ஆக., 3ம் தேதி வரை, ஸ்ரீ மகாருத்ரம், வள்ளி மற்றும் சீதா கல்யாண மகோற் சவம் நடக்கிறது. ஜூலை 31ம் தேதி காலை, 5:00 முதல் இரவு, 9:15 மணி வரை, கணபதி ஹோமம், மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ருத்ர ஜபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம், கோ பூஜை, ருத்ர ஹோமம், வஸோர்தரை, தம்பதி பூஜை, கலசாபிஷேகம், மகா தீபாராதனை, நாராயணீயம், நாமசங்கீர்த்தனம் ஆகியவை நடக்கிறது. வரும் ஆக.,1ம் தேதி, ஸ்ரீ வள்ளி கல்யாண மகோற் சவம் காலை, 9:00 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கிறது. மதியம், 2:45 மணி முதல் இரவு, 9:30 மணி வரை, நாமசங்கீர்த்தனம், தோடய மங்களம், குரு தியானங்கள், அஷ்டபதி, தரங்கம், ராமதாஸர் கீர்த்தனை, டோலோற்சவம் நடக்கிறது. ஆக., 2ம் தேதி காலை, 7:00 மணி முதல், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், தோடய மங்களம், குரு கீர்த்தனைகள், அஷ்டபதி, தரங்கம், ராமதாஸர் கீர்த்தனைகள், தியானம், பூஜை, திவ்யநாமம், டோலோற்சவம் ஆகியவை நடக்கிறது. இறுதிநாளான ஆக.,3ம் தேதி, காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, வேத பாராயணம், உஞ்சவ்ருத்தி, ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம், வசந்த கேளிகை, பவளிம்பு மற்றும் ஆஞ்சநேய உற் சவம் நடக்கின்றன.