உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை பொருட்கள் கடத்திய சிறுவன்

புகையிலை பொருட்கள் கடத்திய சிறுவன்

கோவை: போத்தனுார் போலீசார், வெள்ளலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கறிக்கடை பஸ் ஸ்டாப் அருகே இருந்த பெட்டிக்கடை அருகே இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த முயற்சித்த போது ஒருவர் தப்பினார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். சோதனையில், புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனிடம் இருந்து 3.800 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ