உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தரம் உயராத கிளை நூலகம்: 10 ஆண்டுகளாக போராட்டம்

 தரம் உயராத கிளை நூலகம்: 10 ஆண்டுகளாக போராட்டம்

அன்னூர்: அன்னூரில் கிளை நூலகம் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. வாசகர் வட்ட நிர்வாகிகள் கூறுகையில், 'கோவை வடக்கு தாலுகாவில் இருந்து, 2012ம் ஆண்டு அன்னூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவானது. இதையடுத்து, அன்னூர் கிளை நூலகத்தை தாலுக்கா நூலகமாக தரம் உயர்த்தும்படி நீலகிரி எம்.பி., அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., கோவை கலெக்டர் மற்றும் நூலகத்துறை அலுவலருக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு அனுப்பியுள்ளோம். நேரிலும் வலியுறுத்தியுள்ளோம். எனினும் இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. அன்னூர் வட்டாரத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகளில் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நூலகம் தரம் உயர்த்தப்பட்டால் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை 12 மணி நேரம் நூலகம் இயங்கும். கூடுதலாக தினசரி, வார, மாத இதழ்கள் வாசகர்களுக்கு கிடைக்கும். வேலை தேடுவோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் முதியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசு விரைவில் அன்னூர் கிளை நூலகத்தை, தாலுகா நூலகமாக தரம் உயர்த்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை