உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொழிலதிபர்

விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொழிலதிபர்

கோவை: சென்னை, மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 51 தொழிலதிபர். இவர் தனது 'கேரவன்' வாகனத்தை சர்வீஸ் செய்ய கோவை வந்துள்ளார். இதையடுத்து, சென்னைக்கு செல்வதற்காக, சக்தி வேல் நேற்று முன்தினம் கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவரின் 'பேக்'கை பரிசோதனை செய்த போது, அதில் கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சக்திவேலை பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேல் 'லைசன்ஸ்' பெற்று துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தவறுதலாக எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, துப்பாக்கி லைசன்ஸ் ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். ஆவணங்கள் சரியாக இருந்ததால், போலீசார் துப்பாக்கியை ஒப்படைத்து சக்திவேலை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ