உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழமுதம் பருக வந்ததே அழைப்பு!

தமிழமுதம் பருக வந்ததே அழைப்பு!

குரும்பபாளையத்தில் தமிழ்ச் சங்க விழா இன்று நடக்கிறது.கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், குரும்பபாளையம், ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10:00 மணிக்கு, தமிழ்ச் சங்க விழா நடக்கிறது. புலவர் ரங்கநாதன் தலைமை வைக்கிறார்.ஓய்வு பெற்ற அரசு கலைக்கல்லூரி முதல்வர் நாராயணசாமி, 'நாடோறும் நாடுக மன்னன்' என்னும் தலைப்பில் பேசுகிறார். பாரதி பள்ளி முதல்வர் நாகராஜன், 'திருவள்ளுவரும் பாரதியும்' என்கிற தலைப்பில் பேசுகிறார். பாலக்காடு சுந்தரம் கவிதை வாசிக்கிறார். ஓய்வு பெற்ற பேராசிரியர் சூரிய நாராயணன் உட்பட பலர் சொற்பொழிவாற்றுகின்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழமுதம் பருக, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை