வசந்தராணி மலர்களால் அலங்கரிக்கும் நகர்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மனதை மயக்கும் வகையில் 'ரோசி டிரம்பெட்' என்ற மரத்தில் இளஞ்சிவப்பு நிறப் பூக்கள், பூத்துக்குலுங்குகின்றன.'ரோசி டிரம்பெட்' எனும் வசந்தராணி எனும் மரங்கள், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகப்படியாக காணப்படுகிறது. இந்த மரங்களில், மார்ச் முதல் மே மாதம் வரை, பூக்கள் பூத்துக்குலுங்கும்.தற்போது, அடர் இளஞ்சிவப்பு நிறத்திலும், வெளிர் இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்களைக் கொண்டுள்ளன. மனதை மயக்கும் வகையில் பூத்துக்குலுங்கும் மலர்களை, மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது:மெக்சிகோநாட்டைதாயகமாக கொண்டது இந்த மரம். இதன் தாவரவியல் பெயர் 'டபேபுயியே ரோசியா'. பிக்நானியசியாயே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரம், வசந்தராணி, ரோசியா, லிங்கேனு, டிரம்பட் ஆகிய பெயர்களில் அழைப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து,1,200 மீட்டர் வரை, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. வசந்த காலத்தில் பூ பூக்கிறது. சூரிய ஒளியின் தன்மைக்கு ஏற்ப, பூக்களின் வண்ணம்மாறி காணப்படும்.இவ்வாறு, கூறினர்.