உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரியின் நிறுவன நாள் விழா உற்சாக கொண்டாட்டம்

கல்லுாரியின் நிறுவன நாள் விழா உற்சாக கொண்டாட்டம்

கோவை: பி.எஸ்.ஜி. சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் பி.எஸ்.ஜி. இயன்முறை மருத்துவ கல்லுாரி, தனது நிறுவன நாள் விழாவை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை அரங்கத்தில் கொண்டாடியது. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மைசூர் ஜே.எஸ்.எஸ்., இயன்முறை மருத்துவ கல்லுாரி முதல்வர் கவிதா கலந்துகொண்டார். இயன்முறை மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்களின் சிறப்பை பாராட்டும் வகையில், விருது வழங்கி கவுரவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜா பல்கலை இணை பேராசிரியர் அசோகன், சென்னை, ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் யோகேஸ்வரி, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் செயல்படும், 'மூவ்ப்ரீ பிசியோ' நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆனந்த் சிவயோகம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரி முதல்வர் மகேஷ், துணை முதல்வர் அஷ்ரப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !