உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களைத் தேடி மாநகராட்சி நாளை சிறப்பு முகாம்

மக்களைத் தேடி மாநகராட்சி நாளை சிறப்பு முகாம்

கோவை: கோவை மாநகராட்சியில், 15 நாட்களுக்கு ஒருமுறை, மண்டலம் வாரியாக, 'மக்களைத் தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 10வது வார்டில், சரவணம்பட்டி - காளப்பட்டி ரோட்டில் எஸ்.எம்.எஸ்., மஹாலில் நாளை (11ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை, பொதுமக்களிடம் மாநகராட்சி சேவை தொடர்பான மனுக்கள் பெறப்படும்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் ஸ்ரீதேவி பங்கேற்கின்றனர். மாநகராட்சி தொடர்பான சேவைகளுக்கு விண்ணப்பித்து, தீர்வு காணலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை