மேலும் செய்திகள்
ஒரு போன் போதுமே...
02-Dec-2024
கணபதி மோர் மார்க்கெட் சிக்னல் அருகே மேற்கு பக்கம், நடைபாதையில் கால்களை பதம் பார்க்க நீட்டிக் கொண்டிருக்கும், அகற்றப்பட்ட டெலிபோன் கம்பத்தின் துண்டு பகுதி, ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. இதை அகற்ற வேண்டும். - --இனியன் கல்யாணசுந்தரம், கணபதிபுதுார். மீண்டும் மீண்டும்
இருகூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, காமாட்சிபுரம் ராயப்பசாமி தேவர் வீதியில், சாக்கடை துார் வாரி, அதன் அருகிலேயே கொட்டப்படுகிறது. இதனால், மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து வருகிறது. -ஜோதி மணியன், ராயப்பசாமி தேவர் வீதி. மறந்துட்டாங்களோ
மாநகரில், 63வது வார்டு கன்னிகாபரமேஸ்வரி நகரில், சாலையோரம் தோண்டப்பட்ட குழி, அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு வாசிகள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. -குடியிருப்பு நலச்சங்கத்தினர், கன்னிகாபரமேஸ்வரி நகர். வெளிச்சம் இல்லை
வார்டு எண் 74, சாஸ்திரி வீதி எண் 2, பாப்பநாயக்கன்புதுாரில், சாய்ந்த நிலையில் இருந்த தெருவிளக்கு கம்பம் அகற்றப்பட்டது. புதிய மின்கம்பம் நட்டு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், தெருவின் மையப்பகுதி இருட்டாகவே உள்ளது. -குணசேகரன், பாப்பநாயக்கன்புதுார். பாதசாரிகள் அவதி
பூ மார்க்கெட் அம்மா உணவக கை கழுவும் தண்ணீர் வெளியேறும் குழாய், இரண்டு மாதங்களுக்கு மேல் பழுதாகி உள்ளது. உணவக மேற்பார்வையாளர், மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என்று தெரிவிக்கிறார். உணவகத்துக்கு வரும் மற்றும் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். --ராஜேஷ் குமார், தேவாங்கபேட்டை . சொல்லியும் பயனில்லை
மாநகர் 85வது வார்டு போத்தனுார் அம்மன் நகரில், இரண்டு மின் கம்பங்களில், ஒரு மாதமாக விளக்குகள் எரிவதில்லை. பலமுறை புகார் கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - -காந்தி, அம்மன் நகர். எப்படி போறது
மலுமிச்சம்பட்டி, ரெயின்போ நகர், வடக்கு தோட்ட சாலை பகுதியில், மழைகாலங்களில் தேங்கும் மழைநீரால் மண் சாலை கரைந்து போகிறது. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. மழை காலங்களில் பள்ளி குழந்தைகளும், வேலைக்கு செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். -பூபதி, ரெயின்போ நகர், மலுமிச்சம்பட்டி. பத்து நாட்களாச்சு
கோவை மாவட்டம், 55வது வட்டம், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி பிரதான சாலையில், குழி தோண்டி 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது. பொது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - - செல்வராஜ், நேதாஜிபுரம்.
02-Dec-2024