உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கலைக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் வசதியில்லை

அரசு கலைக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் வசதியில்லை

வால்பாறை: வால்பாறை அரசு கலைக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வால்பாறை நகரில் அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரியில் தற்போது, 980 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், முதலாமாண்டில் மட்டும், 357 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரி வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி குப்பைக்கிடங்கு கல்லுாரியின் அருகில் உள்ளதால் இரவு நேரத்தில் சிறுத்தை அடிக்கடி கல்லுாரி வளாகத்திற்கு வந்து செல்கிறது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். மேலும் பள்ளி விளையாட்டு மைதானம் சேறும், சகதியுமாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், கல்லுாரியின் பின்பக்கம் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கல்லுாரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை