மேலும் செய்திகள்
பரம்பரை ஜோதிடர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை
31-Jul-2025
கோவை: தென்னிந்திய ஜோதிடர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், கோவை ராமலட்சுமி மஹாலில் நேற்றுநடந்தது. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். சங்கத்துக்கான கொடி அறிமுகம் செய்யப்பட்டது. தென்னந்திய ஜோதிடர்கள் சங்க தலைவர் மணிகண்டன் பேசுகையில், ''பல்வேறு வகையான தொழில்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்து, சலுகைகளை வழங்கி வருகிறது. ஜோதிடத்தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். ஒரு சமுதாயமே இப்பணியை செய்கிறது. நாட்களை துல்லியமாக கணித்து, பஞ்சாங்கம் தயாரித்துக் கொடுக்கின்றனர். ஜோதிடத்தை ஒரு தொழிலாக அரசு அங்கீகரிக்க வேண்டும். முறைசாரா தொழில்கள் வாரியத்தில் இணைத்து, ஜோதிடர்களின் குழந்தைகளுக்கு கல்வி, தொழில் கடன் போன்றவைகளையும் அளிக்க வேண்டும்,” என்றார். துணைத்தலைவர் ஆனந்தன், மாநில தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
31-Jul-2025