உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுந்தரபாண்டிய நல்லுாரின் மறைந்த பாசன வரலாறு

 சுந்தரபாண்டிய நல்லுாரின் மறைந்த பாசன வரலாறு

இன்றைய கோவையின் சூலுார், 13ம் நுாற்றாண்டில் சுந்தரபாண்டிய நல்லுார் என அழைக்கப்பட்டு, கொங்குநாட்டின் முக்கிய பாசனக் கிராமமாக விளங்கியது. 40 கல்வெட்டுகளில் ஒன்று, அக்காலத்து நீர்ப்பாசன முறையை தெளிவாக பதிவு செய்கிறது. சுந்தரபாண்டியன், இந்த ஊரை, இன்றைய நாளில் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள குரக்குத்தளி-சுக்ரீஸ்வரர் கோவிலுக்கு தானமாக வழங்கி, பாசன மேலாண்மையை, வெள்ளலுாரின் பிள்ளையான் என்பவரிடம் ஒப்படைத்தார். அணையில் இருந்து கால்வாய்கள் வழியாக குளம் நிரப்புதல், பழுதுகளை உடனே அதிகாரிகளுக்கு தெரிவித்தல், நிலங்களுக்கு நீரை ஒழுங்காக பகிர்தல் ஆகியவை அவரின் பொறுப்புகள். பதிலுக்கு, நெல் அளிப்பதற்கான உரிமை யும், மீன் பிடிக்க மற்றும் வண்டல் மண் எடுக்க வரிகளை வசூலிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. சிறப்பாகப் பணியாற்றிய இவருக்கும், இவரை சார்ந்தவர்களுக்கும், சூலுாரில் வரியில்லாத நிலங்கள் வழங்கப்பட்டன. சூரல் கொடிகள் நிறைந்திருந்ததால், 'சூரலூர்' எனப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் சூலுார் ஆனது. கவிஞர் புலமைப்பித்தன், நடிகர் சிவக்குமார், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோரின் சொந்த ஊரும்கூட இதுவே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ