போலி ஆயில் தயாரித்து விற்பனை செய்தவர் கைது
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், போலி ஆயில் தயாரித்து விற்பனை செய்தவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு, தனியார் ஆட்டோ ஸ்பேர் ஷாப்பில், போலி ஆயில் தயாரித்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த லட்சுமணன்,44, என்பவர், பொள்ளாச்சியில் கடந்த, 12 ஆண்டுகளாக ஆட்டோ ஸ்பேர் ஷாப் நடத்தி வருவது தெரியவந்தது.மேலும், இவர், மதுரையில் இருந்து ஈஸ்வரன் என்பவர் வாயிலாக, போலியாக தயாரித்த ஆயில்களை இருசக்கர வாகனங்களுக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், 10 ஆயில் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.