உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இணைப்பு பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம்

இணைப்பு பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம்

வால்பாறை : நல்லகாத்து - ஸ்டேன்மோர் இணைப்பு பாலத்தை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறை நகரிலிருந்து, மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது நல்லகாத்து எஸ்டேட். இங்கு, 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் எஸ்டேட் தொழிலாளர் களாக உள்ளனர்.இந்நிலையில், இவர்கள் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் உள்ள மருத்துவமனை, அலுவலகம் வந்து செல்ல, 6 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், நகராட்சி சார்பில், 11 ஆண்டுகளுக்கு முன் நல்லகாத்து எஸ்டேட்டுக்கும், ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்கும் இடையே, 10 நிமிடத்தில் வந்து செல்ல வசதியாக இணைப்பு பாலம் கட்டப்பட்டது.நகராட்சியின் இந்த நடவடிக்கையால், இரு எஸ்டேட் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சமீப காலமாக, இந்த இணைப்பு பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பாலத்தை பயன்படுத்த முடியாமல், தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது: நல்லகாத்து மற்றும் ஸ்டேன்மோர் எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, வால்பாறை நகராட்சி சார்பில் கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இணைப்பு பாலம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்த பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தொழிலாளர்கள் பாலத்தில் நடக்க அச்சப்படுகின்றனர். எனவே நகராட்சி சார்பில் பாலத்தை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை