உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயார்!

சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயார்!

சூலுார்: அ.தி.மு.க.,வின், 54வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், சூலுார் அடுத்த சின்னியம்பாளையத்தில் நடந்தது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெ.,க்கு பின், தற்போது, பழனிசாமி வழி நடத்துகிறார். இன்றைக்கு, எம்.ஜி.ஆர்., பெயரை கூறித்தான் புதிய கட்சியை கூட நடத்துகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் தான் அதிக தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, தாங்கள் கொண்டுவந்ததாக, தி.மு.க., விளம்பரம் செய்கிறது. ஒரு திட்டத்தை கூட கொண்டு வராத தி.மு.க., வெற்று விளம்பரம் செய்து வருகிறது. விளம்பர மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சி அமையும். இவ்வாறு, அவர் பேசினார். ஒன்றிய செயலாளர் கந்தவேல் வரவேற்றார். எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை