உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஸ்பெக்டரை சுட்டவர் சிறையில் அடைப்பு

இன்ஸ்பெக்டரை சுட்டவர் சிறையில் அடைப்பு

கோவில்பாளையம்; இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட டிரைவர், அரசு மருத்துவமனையில் இருந்து மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் ஹரி ஸ்ரீ, 23. டிரைவர். இரு வாரங்களுக்கு முன் இவர் தன்னுடன் தகராறு செய்த திருச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். வானத்தை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டார்.இதையடுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ஹரி ஸ்ரீ யை பிடித்தனர். ஹரி ஸ்ரீ மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்ற இன்ஸ்பெக்டரை நோக்கி ஹரி ஸ்ரீ நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். எனினும் துப்பாக்கி குண்டு அவர் மீது படாமல் போலீஸ் ஜீப் பம்பரில் பட்டு தெறித்தது.இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இளங்கோ துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ஹரி ஸ்ரீ யின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சையில் துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. குணமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் ஹரி ஸ்ரீ கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்தில் இவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை