கோவைக்கும் வந்து விட்டது பிக்கிள் பால் ஓபன் போட்டி
கோவை; 'கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்' சார்பில், பிக்கிள் பால் ஓபன் போட்டி, கோவை, திருச்சி ரோட்டிலுள்ள, பிக்கிள் பால் கிளப் ஹவுசில், துவங்கியது. கோவை கலெக்டர் பவன்குமார் போட்டியை துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கூறியதாவது: திறன் மற்றும் வயது அடிப்படையில், 10 பிரிவுகளில், கோவையில் போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை வீரர்கள் சரவணன், வெங்கடேஷ், ஜெய்ஷ்னு, அனீஷ் மற்றும் விஸ்வஜித், பெங்களூர் வீரர்கள் கவுதம், ரஞ்சித், ஸ்பேடன் மற்றும் ஆதித்யா பிரதீப், கோல்கட்டா வீரர் வினய் சேத்தியா, கோவை வீரர்கள் பூபதி மற்றும் ரித்திகா ஆகியோர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மொத்தம், நான்கு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டு வளர்ந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.