கள் இறக்கிய விவசாயிகளிடம் போலீசார் விசாரணை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நெகமம், ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில், கூடுதல் எஸ்.பி., சிரிஷ்டிசிங் தலைமையிலான போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அவ்வகையில், தென்னந்தோப்பில், கள் இறக்கியதாக, ஒன்பது விவசாயிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தகவல் அறிந்த விவசாயிகள் பலர், மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவசாயிகளை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்தனர். கூடுதல் எஸ்.பி., விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ''இனி கள் இறக்கக் கூடாது'' என எச்சரித்து, ஒன்பது விவசாயிகளை விடுவித்தார்.நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ''கடந்த, 2009ல் இருந்து, கள் இறக்க, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை,'' என்றார்.