மேலும் செய்திகள்
ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
30-Apr-2025
பொள்ளாச்சி, ; போக்சோ வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கும் நபர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.கோவை மாவட்டம், ஆழியாறில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைஅளித்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் குமார், 25 என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.தினேஷ்குமார் தொடர்ந்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, எஸ்.பி., கார்த்திகேயன் கோவை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி, தினேஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டார்.
30-Apr-2025