மேலும் செய்திகள்
தக்காளி வரத்து குறைவு; மழையால் மாற்றம்
12-Oct-2024
உடுமலை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உடுமலை சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்த நிலையில், விலையும் பல மடங்கு அதிகரித்தது.தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், உடுமலை பூ மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு, பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் உயர்ந்த நிலையில், விலையும் உயர்ந்து காணப்பட்டது.உடுமலையிலுள்ள மொத்த விற்பனை பூ சந்தை கடைகளுக்கு, திண்டுக்கல் நிலக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து, மல்லி, செவ்வந்தி, செண்டுமல்லி என பல வகை பூக்கள், இரண்டு டன்னுக்கு மேல் வந்தது.கடந்த சில நாட்களாக, விலை குறைந்து காணப்பட்ட பூக்கள் விலை, நேற்று அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி, 2 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது.அதே போல் மற்ற பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்தது. ஜாதிமல்லி மற்றும் முல்லை பூக்கள் கிலோ, ரூ. ஆயிரம் ரூபாய்க்கும்,பட்டு ரோஸ், கிலோ ரூ. 800, சம்மங்கி பூ ரூ.400, செண்டுமல்லி, ரூ.100 மற்றும் அரளி, துளசி, செவ்வரளி பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
12-Oct-2024