உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரும்பு நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்

இரும்பு நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்

கோவை; கோவை, பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரி முன் அமைத்துள்ள இரும்பு நடைமேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.கோவை, பீளமேடு பகுதியில் பொறியியல் கல்லுாரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ - மாணவியர் சாலையை கடக்க சிரமப்பட்டனர். அவர்கள் வசதிக்காக, இரும்பு நடைமேம்பாலம் அமைக்க அனுமதி தரப்பட்டது. அதில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வழித்தடம் அமைக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது.அதன்படி, ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதையில் இருந்து படிக்கட்டு வழியாக இரும்பு நடைமேம்பாலத்துக்கு சென்று, எதிர்திசையில் இறங்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்துள்ள படிக்கட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !