உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சேறும் சகதியுமாக சாலை; கிராம மக்கள் அவதி

 சேறும் சகதியுமாக சாலை; கிராம மக்கள் அவதி

பொள்ளாச்சி: கெடிமேடு, வேலவன் நகர் இணைப்பு சாலையில், மழை வெள்ளம் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளதால், மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே, கோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டு கெடிமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, வேலவன் நகர் இணைப்பு சாலை அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்கள் இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, புதிதாக தார் சாலை அமைக்கும் பொருட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்யும் மழையால், சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும், சாலையின் நடுவே தாழ்வான பள்ளம் காணப்படுவதால், வெள்ளம் வழிந்தோடுவதில்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து சாலை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ