உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 8வது முறை நிரம்பியது சோலையாறு

8வது முறை நிரம்பியது சோலையாறு

வால்பாறை: வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்தநிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி முதல் முறையாக நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையால் கடந்த மாதம் வரை சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்யும் நிலையில்,நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்து சோலையாறு அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இந்த ஆண்டில் மட்டும், சோலையாறு அணை எட்டு முறை நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி