மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் திறக்கப்படாத கழிப்பிடம்
16-Oct-2025
வால்பாறை: காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் பூட்டி கிடப்பதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகரில், காந்திசிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. நகரில் மத்தியப்பகுதியில் அமைந்தள்ள காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து தான், எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நகராட்சி சார்பில் அந்தப்பகுதியில் பயணியர் சிறுநீர் கழிக்க வசதியாக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கூறியதாவது: காந்தி சிலை வளாகத்தில் பயணியர் வசதிக்காக கட்டப்பட்டுள்ள சிறுநீர் கழிப்பிடம் கடந்த இரண்டு நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும், அவசரத்திற்கு கூட கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சிறுநீர் கழிக்க கூட முடியாத நிலையில் பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும். இவ்வாறு, கூறினர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'காந்திசிலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீர் கழிப்பிடம் பராமரிப்பு பணிக்கு மறு ஏலம் விடப்படவுள்ளது. ஏலம் விடப்பட்ட பின் ஒப்பந்ததாரர் வாயிலாக கழிப்பிடம் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்,' என்றனர்.
16-Oct-2025