திருக்கல்யாண உற்சவ திருவிழா
கோவில்பாளையம்,; கோவில்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவத் திருவிழா நாளை துவங்குகிறது.கோவில்பாளையம் காவல் தெய்வமான, சக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழா நாளை (23ம் தேதி) துவங்குகிறது. அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 7:00 மணிக்கு அபிஷேகமும், அம்மனுக்கு பொரிச்சாட்டும் நடைபெறுகிறது.வரும் 29ம் தேதி வரை, தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி இரவு காப்பு கட்டி, கம்பம் நட்டு, பூவோடு வைத்து வழிபாடு நடக்கிறது. மே 7ம் தேதி இரவு 8:00 மணிக்கு, அம்மன் அழைத்து வருதலும், கரகம் எடுத்தலும் நடக்கிறது. மே 8ம் தேதி காலை 7:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. காலை 10:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், மதியம் பூவோடு எடுத்தல், மாலையில் அக்னி கரகம் மற்றும் அலகு குத்தி தேர் இழுத்தல் நடைபெறுகிறது. வரும் மே 9ம் தேதி காலை 9: 00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், மதியம் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.