உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெயின்டிங் வேலை செய்த பெண் தவறி விழுந்து பலி

பெயின்டிங் வேலை செய்த பெண் தவறி விழுந்து பலி

கோவை: பெயின்டிங் வேலை செய்யும்போது சாரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 44; கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் சிங்காநல்லுார் சென்ட்ரல் ஸ்டுடியோ அருகில் உள்ள தனலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு பெயின்டிங் வேலை செய்ய சென்றுள்ளார்.அப்போது, சாரத்தின் மீது நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி