மேலும் செய்திகள்
மதுர காளியம்மன் கோவிலில் செப்.4ல் கும்பாபிஷேகம்
19-Aug-2025
அன்னுார்; அன்னுார் அருகே மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் நேற்று தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது. அன்னுாருக்கு வடக்கே, ஓதிமலை சாலையில், லக்கே பாளையம் கோவில்பாளையத்தில், ஈஞ்ச குல மக்களால் 300 ஆண்டுகளுக்கு மேல் குலதெய்வமாக வழிபட்டு வரும் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முழுவதும் புதிதாக கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை உடன் துவங்கியது. நேற்று மாலை பாசக் குட்டையில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் ஏந்திய படியும் முளைப்பாலிகையை கைகளில் வைத்தபடியும் ஊர்வலமாக புறப்பட்டனர். வரும் வழியில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் ஊர்வலத்தில் இணைந்தனர், அலங்கார குதிரை நடனம், கேரள பம்பை இசைக்கேற்ப நடனம் ஆகியவற்றுடன் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மாலை 6:00 மணிக்கு கோவிலை வந்து அடைந்தனர். இதை அடுத்து கோவிலில் விமான கலசம் நிறுவும் பணி நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (2ம் தேதி) மதுர காளியம்மன் எழுந்தருளும் திருக்குடத்திற்கு வழிபாடு மற்றும் பேரொளி வழிபாடு நடக்கிறது. 4ம் தேதி காலை 9:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், மூலவர் மதுர காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்குகிறார்.
19-Aug-2025