உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதை பரிசோதனை கூடத்தில் திருட்டு

விதை பரிசோதனை கூடத்தில் திருட்டு

கோவை : கோவை, சாய்பாபா காலனி தடாகம் ரோட்டில், வேளாண் துறை கட்டுப்பாட்டில் விதை பரிசோதனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விதை பரிசோதனை அலுவலராக நர்கீஸ், 51 இருந்து வருகிறார். பரிசோதனை நடக்கும் நேரத்தில் மட்டுமே ஆய்வகம் திறந்திருக்கும்.இந்நிலையில், பரிசோதனை கூடத்தினுள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பரிசோதனைக்கான 7 கருவிகளை திருடிச் சென்றார். இதுகுறித்து, பரிசோதனை கூட அலுவலர் நர்கீஸ் சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை